திரு. பொன்னம்பலம் கனகலிங்கம்
(வியாங்கொடை பிரபல வர்த்தகர்)
தோற்றம்: 15 செப்டம்பர் 1934 - மறைவு: 12 செப்டம்பர் 2026
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னம்பலம் கனகலிங்கம் அவர்கள் 12-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் ஆருயிர் கணவரும்,
நிரஞ்சினி (ஜேர்மனி), சிவகுமார் (இலண்டன்), உதயரஞ்சினி (இலண்டன்), சிவரஞ்சினி (இலண்டன்) ஆகியோரின் அருமை தகப்பனாரும்,
தயாபரன், மைதிலி, சுகிர்தராஜா, பிரதீபன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
கவிதரன், நிலவன், இலக்கியா, ஸ்ரவன், சங்கீத், சைந்தவ், அபிராம், பிரசிகா, மகிசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், சகுந்தலா, யோகேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம், நவமணி, இராசமலர், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-09-2026 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் (நந்தாவில் அம்மன் கோவில் வீதி, கொக்குவில், யாழ்ப்பாணம்) நடைபெற்று, திருவுடல் புங்குடுதீவு மணற்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
