திரு. பொன்னம்பலம் சின்னத்துரை
தோற்றம்: 18 நவம்பர் 1959 - மறைவு: 07 ஜனவரி 2026
யாழ். இளவாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், விபுலானந்தர் வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் சின்னத்துரை அவர்கள் 07-01-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராமசாமி - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பஞ்சாட்சரதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
கஸ்தூரி (ஆசிரியை - முல். உடையார்கட்டு மத்திய வித்தியாலயம்), கோரிசங்கர், பவித்திரன், அபிராமி (மாணவி, Radiography, KDU) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரோஜன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மாமனாரும்,
ராம்வர்ஜன், திவ்யவர்ஷினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, இராஜி, இராசேந்திரம், நகுலேஸ்வரி, சிறிகரன் ஆகியோரின் பாசமிகு அருமைச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான நாகராசா, Dr விக்கினேஸ்வரராஜா, ஸ்ரீஸ்கந்தராசா, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-01-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
