Mrs Ponnampalam Achippillai

Ponnampalam Achippillai

Date of Birth: 01 November 1945 - Deceased: 05 June 2026

யாழ் கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி கிழக்கு அரசன் திடலைவசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பொன்னம்பலம் ஆச்சிப்பிள்ளை  அவர்கள் 05-06-2026ம் திகதி வெள்ளிக்கிழமை சிறுப்பிட்டியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா  தம்பதியரின் பாசமிகு ஏக புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றசிவானந்தன் மற்றும் மஞ்சுளாதேவி, தவமதி, கேதீஸ்வரன்(அதிபர் புன்னாலைக்கட்டுவன்மத்திய வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜ்மோகன், பாலேஸ்வரன், சிவானி( உதவிக்கல்விப்பணிப்பாளர் கிளிநொச்சி)  ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரிகரன், ஹம்சத்வனன், புரகீசன்,  ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 07-06-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 900 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றுஇ பூதவுடல் சிறுப்பிட்டி கிழக்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2026 18:07)