திரு. பொன்னம்பலம் பாலசிங்கம்

பொன்னம்பலம் பாலசிங்கம்

தோற்றம்: 06 ஜூன் 1936 - மறைவு: 16 ஆகஸ்ட் 2026

யாழ் மாளிகைவளவு  புத்தூரைப் பிறப்பிடமாகவும், வல்லைவீதி சங்கானையை வசிப்பிடமாகவும், கொண்ட திரு. பொன்னம்பலம் பாலசிங்கம் அவர்கள் நேற்று 16-08-22026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம், தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகனும்,
 
காலஞ்சென்ற வல்லிபுரம், நேசம்மா தம்பதியரின் அன்பு மருகனும்,
 
இரத்தனம் அவர்களின் பாசமிகு கணவரும்,
 
ஸ்ரீகுமார் (உதவி ஆணையாளர், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், வவுனியா), ஸ்ரீபவன் (மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சாந்தகௌரி (ஆசிரியை, புனித ஜோன் பொஸகோ வித்தியாலயம், யாழ்ப்பாணம்), கஜேந்தினி (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஷிரிகா (வேம்படி மகளீர் உயர்தர பாடசாலை மாணவி), கனிஸ்கா (வேம்படி மகளீர் உயர்தர பாடசாலை மாணவி), பிரதிஸ்கா (யாழ் இந்து மகளீர் கல்லூரி மாணவி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
சிவகுருநாதன், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சின்னம்மா, சிவக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
கணேசலிங்கம், சண்முகலிங்கம், காலஞ்சென்ற இந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 17-08-2026ம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வினாவெளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/08/2026 02:16)