Mr. Ponnampalam Ramakrishnan
(Former Senior Laboratory Technician at York College-CUNY)
Date of Birth: 09 February 1941 - Deceased: 14 May 2025
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஓமான், நீயுயோர்க் அமெரிக்கா(NEW YORK),Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் இராமகிருஷ்ணன்,MT (சின்ராசு) அவர்கள் வியாழக்கிழமை, மே 15, 2025 அன்று இடைக்காடு புவனேஸ்வரி அம்பாளின் பாதங்களை சரணடைந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
அனுசியா (New Jersey, USA), அனுரதன் (Boston, USA) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானராஜா, ராஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
வேந்தன், மூர்த்தி, கவீஷன், அருணீசன், ஆதியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தெய்வநாயகி, இராமுப்பிள்ளை மற்றும் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், இராமச்சந்திரன், சின்னமணிதேவி, கலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான முத்தம்மா, வைரமுத்து, சோமசுந்தரம், தேவநாயகம், கமலாம்பிகை, மற்றும் இரட்னேஷ்வரி, சிவகாமியம்மா, பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை மே 25, 2025 முற்பகல் 11:00 மணிதொடக்கம் பிற்பகல் 2:00 மணி வரை Leete-Stevens Enfield Chape (61 South Road, Enfield, CT 06083) முகவரியில் நடைபெறும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
