திரு. பொன்னம்பலம் இராமுப்பிள்ளை
(ஓய்வுபெற்ற சுங்கத்துறை அத்தியேட்சகர்)
மறைவு: 29 மே 2025
யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் இராமுப்பிள்ளை அவர்கள் 29-05-2025 புதன்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார், இரட்ணேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, வைரமுத்து, இராமலிங்கம், இராமச்சந்திரன், இராமகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-06-2025 செவ்வாய்கிழமை காலை 9:00 மணி முதல் இரவு 9:00 வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-06-2025 புதன்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
