Mr. Ponnampalam Thangarasa
Date of Birth: 15 January 1939 - Deceased: 25 September 2025
மலேசியா செரம்பானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு, ஆவரங்கால் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் தங்கராசா அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை காலை 8.15 மணியளவில் அமரத்துவம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - நல்லபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
தயானந்தன் (பிரித்தானியா), ஜெயந்தினி (ஜேர்மனி), ஜெயந்தன் (சிங்கபூர்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
ராதிகா (பிரித்தானியா), விஜயசிறீலன் (ஜேர்மனி), வசுமதி (சிங்கபூர்) ஆகியோரின் மாமனாரும்,
ஹரிணி, கிருஷ்ணி, கர்சனா, வர்ஷனன், வர்ஷிகா, சாதுர்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-09-2025 திங்கட்கிழமை காலை 08.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
www.tamilthakaval.org
