திரு. பொன்னம்பலம் வயித்திலிங்கம்

பொன்னம்பலம் வயித்திலிங்கம்

தோற்றம்: 08 ஆகஸ்ட் 1941 - மறைவு: 23 டிசம்பர் 2020

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வயித்திலிங்கம் அவர்கள் 23-12-2020 புதன்கிழமை அன்று இங்கிலாந்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானியார் பொன்னம்பலம், செல்லம் தம்பதிகளின் அன்பு இளைய மகனும், 
காலஞ்சென்ற இராமலிங்கம், பரமேஸ்வரி(மலேசியா, நியூசிலாந்து) தம்பதிகளின் ஆசை மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

இராகுலன், தயாளினி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகந்தினி, சிவகணேஷ், சுரேன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இலட்சுமியார், பூரணம் (பெரியபிள்ளை), பரமலிங்கம், கார்த்திகேசு, பூமாதேவி மற்றும் நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணர்- வள்ளியம்மை தம்பதிகள், வெற்றிவேலு- தங்கமுத்து தம்பதிகள், இராமலிங்கம்- மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு பெறா மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், தில்லையாச்சி ஆகியோரின் ஆசை மருமகனும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவபாதசுந்தரம், சிவசிதம்பரம், ஞானேஸ்வரி, பரமேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரி, மகேஸ்வரி, சிவப்பிரகாசம், குகனேஸ்வரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், நடராசா, துரைசிங்கம், சோமசுந்தரம் மற்றும் மகிழ்தேவி, விஜயசுந்தரி, சிவனேஸ்வரன், ரவி, கீதா உஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஞானேஸ்வரி, சிவசண்முகமூர்த்தி, இரவீந்திரன், மைதிலி, காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரி, லோகநாதன், ஆறுமுகம், சிவநாதன் ஆகியோரின் பாசமிகு தாய் மாமாவும்,

தயாளன், நித்திய அருணா, நிர்மலா, மிருணாளினி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

சனா, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
இராகுலன் - மகன் Mobile : +44 780 260 4567
மூர்த்தி - மருமகன் Mobile : +44 795 627 4926

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2020 08:12)