திரு பொன்னம்பலம் யோகேஸ்வரன்

(முன்னாள் பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளர்)

பொன்னம்பலம் யோகேஸ்வரன்

மறைவு: 01 மே 2024

யாழ். புலோலி கிழக்கை பிறப்பிடமாகவும், ஒழுங்கைத் தோட்டம் வல்வெட்டி , உண்டுவத்தை அல்வாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் யோகேஸ்வரன் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் - சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற கந்தவேல் - கௌரி அம்பாள் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

கமலவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரிகரன் (கனடா), தசரதன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்சினி (கனடா), தமயந்தி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

தரண்யா, அபிநயா (கனடா), ஸஜிநயா (இலங்கை) ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான ரத்தினம், சண்முகநாதன் மற்றும் தர்மரத்தினம், மனோரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று  காலை 8.30 மணியளவில் உண்டுவத்தை அல்வாய் (பாரதிதாசன் நூல் நிலைய விளையாட்டு மைதானத்திற்கு முன்னால்) உள்ள மகனது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2024 04:00)