திரு. பொன்னையா இரத்தினசிங்கம்
தோற்றம்: 02 பெப்ரவரி 1936 - மறைவு: 07 அக்டோபர் 2022
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா இரத்தினசிங்கம் அவர்கள் 07-10-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
செல்லையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயா, காலஞ்சென்ற குமார், சிவா, கண்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மநாதன், காஞ்சனா, கவிதா, பிரியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டிலக்ஷன், கவிஷன், ஹரிணி, பிரிட்னி, அஸ்வினி, லக்ஷா, லியம், நிகிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,கோபிசாய், அலையாசக்தி ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, பறுபதம், தம்பிராஜா மற்றும் இராசலட்சுமி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, செல்லையா, சறோ, குமரேசு மற்றும் யோகமலர், அரியம், றஞ்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
