Mr. Ponnusamypillai Nagendran
(உரிமையாளர் - அசோகாஸ் டயர் டிரேடர்ஸ், ஹட்டன்)
Date of Birth: 20 November 1959 - Deceased: 06 September 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் சேருகுடி கிராமம் பூண்டுலுடையான் கோத்திரம் ஹட்டன் காலஞ்சென்ற V.K.T. பொன்னுசாமிபிள்ளை - சீதாலெட்சுமி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கேகாலை கனகரட்ணம் பிள்ளை - லீலாவதி அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனுமான திரு. P. நாகேந்திரன் அவர்கள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன், பவித்ரா, ரிஷிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்
சஞ்ஜெய் (Proline Tex Colombo), அகல்யா (ஹட்டன்) ஆகியோரின் மாமனாரும்,
இராஜேந்திரன் (அவுஸ்திரேலியா), அசோகன் (Prince Hall-ஹட்டன்), கிருஷ்ணவேனி (ஹட்டன்), சரோஜினி (சென்னை), நிர்மலாதேவி (கொழும்பு), பவானி (திருச்சி) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற கணேசன், K.நடராஜா (சென்னை), S.P.முருகேசன் (Janamangala Traders -கொழும்பு), காலஞ்சென்ற Y.சுப்பையாபிள்ளை (திருச்சி) ஆகியோரின் மைத்துனரும்,
கலைச்செல்வி (அவுஸ்திரேலியா), கீதா (கொழும்பு) ஆகியோரின் கொழுந்தனாரும்,
மகேஸ்வரன் (Mileka Jewellers கேகாலை), ராஜேந்திரன் (Saranya Jewellers - கேகாலை), பாஸ்கரன் (Sri Devi Jewellery - கேகாலை) ஆகியோரின் மாப்பிள்ளையும்,
காலஞ்சென்ற ராணி, பவானி ஆகியோரின் மாமாவும்,
உலகநாதன், திலகா (கொழும்பு). மாரியாபிள்ளை, ஜெயந்தி (கண்டி) ஆகியோரின் சம்பந்தியும் நிதிலன்வேத்தின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-09-2026 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் இல- 25, பன்சல ரோட், ஹட்டனில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-09-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கொட்டகலை கொமர்ஷல் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
N.செந்தூரன்:- +94 77 083 1765
P.இராஜேந்திரன்:- +61 448 626 842
P.அசோகன்:- +94 77 319 4556
U.சஞ்ஜெய்:- +94 77 009 5815
www.tamilthakaval.org
