திரு. பொன்னுத்தம்பி பாலகிருஷ்ணன்

(முன்னாள் ஆலோசகர் -Intertek Testing Services Lanka (pvt) Ltd and Cotecna Lanka)

பொன்னுத்தம்பி பாலகிருஷ்ணன்

தோற்றம்: 08 மார்ச் 1947 - மறைவு: 03 ஜூலை 2026

மட்டகளப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னுத்தம்பி பாலகிருஷ்ணன் அவர்கள் 03-07-2026 அன்று கொழும்பில் இறைவனடி ​சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்தம்பி- நல்லம்மா தம்பதியினரின் ஆருயிர் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பூரணானந்தா -பூமதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பவானி அவர்களின் ஆருயிர் கணவரும்,

நிர்மலன் (அவுஸ்திரேலியா), ஐஸ்வர்யா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லங்கேஷா, ஐங்கரன் ஆகியோரின் மாமனாரும்,

ஆதியா, ஆர்ணா, அஸ்ரிதன், அதர்வன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அரியபுஸ்பம் (கனடா), காலஞ்சென்றவர்களான தனலக்‌ஷ்மி, விக்னேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணதாஸ், ராமச்சந்திரன் மற்றும் சிவலிங்கம், காலஞ்சென்ற யோகேந்திரா, ஆனந்தி ஆகியோரின் மைத்துனரும்,

கிரிஷாந்தன், புஸ்பராகவன், நர்மதா, காலஞ்சென்ற உமாகாந்தன், காயத்ரி, கனகேஸ்வரன், நகுலேந்திரன், தனசீலன், நிதர்ஷன், காலஞ்சென்ற நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-07-2026 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் இல- 4, யுனிட்டி பிளேஸ், கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.30 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் (New Cremetorium) தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2026 00:00)