திரு. பொன்னுத்துரை அம்பிகைபாகன்
(பண்டாரவளை குகன் ஸ்டோர்ஸ் - முன்னாள் வர்த்தகர்)
தோற்றம்: 16 ஏப்ரல் 1955 - மறைவு: 29 நவம்பர் 2024
யாழ். காரைநகர் கோவளத்தைசப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை அம்பிகைபாகன் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னுத்துரை-காமாட்சி தம்பதியினரின் இளைய மகனும்,
மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
காண்டீபன் (இலண்டன்), ஷாலினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சியாமளா (இலண்டன்), செந்தூரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வெண்பா, கவின், ராணா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இராசேந்திரனின் சகோதரனும்,
விநாயகசிவம்-பரமேஸ்வரி, ஸ்ரீஸ்கந்தராஜா-லக்ஷ்மிதேவி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 30-12-2024 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை (Western Funeral Home, Negombo) மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 02-12-2024 திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
