திரு. பொன்னுத்துரை கமலநாதன்
(யூனியன் கல்லூரியின் 26 ஆவது அதிபராக 1994- 1996 வரை கடமையாற்றியவரும், 16 வருடங்களாக யூனியன் கல்லூரியின் தலைசிறந்த வர்த்தக ஆசிரியர்)
தோற்றம்: 13 மே 1947 - மறைவு: 25 ஜூன் 2024
யூனியன் கல்லூரியின் 26 ஆவது அதிபராக 1994- 1996 வரை கடமையாற்றியவரும், 16 வருடங்களாக யூனியன் கல்லூரியின் தலைசிறந்த வர்த்தக ஆசிரியராகவும் கடமையாற்றிய திரு. பொன்னுத்துரை கமலநாதன் அவர்கள் 25.06.2024 அன்று செவ்வாய்க்கிழமை இறைபதமடைந்தார் என்பதை கனத்த இதயத்துடன் அறியத்தருகிறோம்.
உயர்ந்த பண்பாளராகவும், ஆழ்ந்த கல்விப்புலமை படைத்தவரும், என் தந்தையாரின் பெருமதிப்பிற்கும் உரிய திரு.கமலநாதன் அவர்கள் கொக்குவில் இந்துக் கல்லூரியின் புகழ்பூத்த அதிபராக 1996- 2007 வரை கடமையாற்றியவர்.
ஓய்வுபெற்றதன் பின்னர் யூனியன் கல்லூரியின் கதிர் பாலசுந்தரம் நிதியம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம், மருதனார்மடம் வாழ்வகம் விழிப்புலனற்றோர் சங்கம், கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் பல வழிபாட்டுத் தலங்களின் பொதுச்சபை உறுப்பினராகவும், நிர்வாக சபை உறுப்பினராகவும், தன் ஓய்வுகாலத்திலும் தன் முழு நேரத்தையும் இந்த மண்பயனுற இறுதி மூச்சுவரை தன் வாழ்கையை அர்பணித்த பெருமகன்.
யாழ் தாவடியைப் பிறப்பிடமாகவும் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னார்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
பொன்னம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்திரமதியின் அன்புக் கணவரும்,
யூனியன் கல்லூரி பழைய மாணவர்கள் பால்ராஜ் (கனடா), பவானி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சில்வியா (கனடா), தயானந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றெபேகா, தீபிகா, அசானி ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,
சந்திரநாதன் (ஓய்வுநிலை உத்தியோகத்தர், நில அளவைத் திணைக்களம்),ஜெகநாதன் (ஜேர்மனி), ஜெயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரதி (இளைப்பாறிய பிரதி அதிபர், கொக்குவில் இந்துக் கல்லூரி), ஜெகசோதி (ஜேர்மனி), காலஞ்சென்ற லிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28-06-2024 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு
அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக கொத்தியாலடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
அமரர் அவர்களின் ஆத்மா நித்திய பேரின்பப் பெருவாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் அன்பு மனைவி, அருமைப் பிள்ளைகள் மற்றும், உறவுகளின் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை யூனியன் கல்லூரி சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டிருக்கின்ற அமரர் பொன்னுத்துரை கமலநாதன் அவர்களின் ஆத்மா சாந்திபெறுவதாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2024 00:39)
