Mr. Ponnuthurai Ravichandran

Ponnuthurai Ravichandran

Date of Birth: 28 February 1967 - Deceased: 25 January 2025

யாழ். திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவிலடி பதிவுகாரர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், Mississauga - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை ரவிச்சந்திரன் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - தங்கமாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,

கெங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நிதர்சன் (நிச்சு- கனடா), நிவேதா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துரைச்செல்வி (இலண்டன்), ஐங்கரநேசன் (யாழ்ப்பாணம்), ஆறுமுகநேசன் (இலண்டன்), பத்மினி அனுசூயை (கனடா), ஸ்ரீதத்தாதிரேயநேசன் (யாழ்ப்பாணம்), திருக்கேதீச்சரநேசன் (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-02-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 12:30 மணி வரையும் St John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"ரவி என்றதும் உங்கள் புன்சிரிப்பு முகம்தான் எம் கண்முன்னே வந்து நிற்கின்றது.செய்தி அறிந்த போது இது ஒரு கனவாக இருக்கக் கூடாதா என எம் மனம் ஏங்கியது. ரவி உங்கள் இழப்பு எங்கள் எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத ஓர் பேரிழப்பு. உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்து விழி நீருடன் விடை தருகின்றோம். -Family: குமாரண்ணா, வசந்தி அக்கா, பிள்ளைகள், மருமக்கள்."
- Vasanthy.Sivakumar (Canada, 31/01/2025 12:35)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2025 05:00)