Mr. Ponnuthurai Shanmugarajah (Patthar)

Ponnuthurai Shanmugarajah (Patthar)

Date of Birth: 18 February 1954 - Deceased: 23 October 2024

யாழ். வேளாதோப்பு கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், இத்தியடிப் பிள்ளையார் கோவிலடி, சங்கத்தானை சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை சண்முகராசா அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை பத்தர்-கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சின்னையா பத்தர்-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானந்தம், காலஞ்சென்ற புஸ்பவதி, யோகராணி, காலஞ்சென் பிறேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி, திலகவதி, இராசபூபதி, ஜெயலட்சுமி, நடேசமூர்த்தி, பரமேஸ்வரமூர்த்தி, காலஞ்சென்ற தம்பிராசா, குமார் ஆகியோரின் மைத்துனரும்,

சுதாஜினி, சுபாஜினி, சுரேஸ், தர்சினி, அருணா ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-10-2024 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2024 04:00)