திரு பொன்னுத்துரை சிவதாசன்

(முன்னாள் வீரகேசரி முகாமையாளர் - வவுனியா)

பொன்னுத்துரை சிவதாசன்

தோற்றம்: 02 மார்ச் 1946 - மறைவு: 01 பெப்ரவரி 2024

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அளவெட்டி - தம்மளை, வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை சிவதாசன் அவர்கள் 01-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்செனற் பொன்னுத்துரை - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும், 

புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. குகதாசன் (ஐக்கிய இராச்சியம்) அவர்களின் அன்பு தம்பியும்,

ரஞ்சினி, காலஞ்சென்ற குமாரவேல்ராஜா மற்றும் ஞானவேல்ராஜா, மோகனச்சந்திரன், சிவசக்தி, திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குலசிங்கம், ஆனந்தராஜா, ஶ்ரீரதி, நளினா,  காலஞ்சென்ற தங்கமலர் ஆகியோரின் சகலனும்,

அனோஜன், நிரஞ்ஜன், மயூரன், மாலவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கார்த்திக், உமையா, குருபரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தனுஜா, மிர்ணாலினி, ஜானியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டினாரா, டிமித்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-02-2024 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பிற்பகல் 1.00 மணி தொடக்கம் பிற்பகல் 7.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 11.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று தொடர்ந்து நண்பகல் 12.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"I am sorry for your loss. Blessings and all best wishes to everybody in the family. Also to friends. Anna in Copenhagen, Denmark"
- Anna Ragnhild Dam (Denmark, 04/02/2024 07:06)
"May his soul rest in peace. Our heart felt condolences to all the family members. Umesh & family."
- Umasuthan Sriramakrishna (United Kingdom , 03/02/2024 21:41)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/02/2024 05:00)