திரு பொன்னுத்துரை தேவபாதம்

(ஓய்வுபெற்ற யாழ் மருத்துவபீட தொழில் நுட்பவியலாளா்- யாழ் பல்கலைக்கழகம்)

பொன்னுத்துரை தேவபாதம்

தோற்றம்: 12 பெப்ரவரி 1955 - மறைவு: 20 ஜூலை 2022

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தேவபாதம் அவர்கள் 20-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னாா், காலஞ்சென்ற வயிரமுத்து பொன்னுத்துரை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற செல்லப்பா, பாா்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கேஸ்வரி(ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- சிறுப்பிட்டி GTMS பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

கம்சிகா(தாதியர் பீடம்- கொழும்புப் பல்கலைக்கழகம்), சானுகா(கால்நடை வைத்திய பீடம்- பெரதேனியாப் பல்கலைக்கழகம்), சுபஸ்திகா(சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவராணி(இலங்கை), திருநாவுக்கரசு(ஓய்வுபெற்ற கிராம சேவை அலுவலர், கனடா), சிவலோகநாதன்(கனடா), சுகிர்தராணி(கனடா), யமுனராணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை, கனடா), ஆனந்தராசா(கனடா), காலஞ்சென்ற சி. யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/07/2022 03:37)