திரு. பொன்னுத்துரை உதயகுமார்

பொன்னுத்துரை உதயகுமார்

மறைவு: 21 ஏப்ரல் 2025

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், வவுனியா ஆகிய இடங்களை வசிப்படமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை உதயகுமார் அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  பொன்னுத்துரை - புஷ்பரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,

இங்கிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ஹபிலா, நிசாந்தி, சதுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரதிமதிகுமாரி, மலர்மதிகுமாரி, காலஞ்சென்ற இந்திரகுமார்,  நிர்மலகுமாரி, கிருஷ்ணகுமார், ஜோதிஷ்வரன், அருட்சோதி, லதிஸ்குமார் ஆகியோரின் சகோதரரும்,

லிசானியா, டிஷ்சான், துஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2025 04:00)