திருமதி பூங்காவனம் கைலாசபிள்ளை
தோற்றம்: 18 ஜூலை 1931 - மறைவு: 06 ஏப்ரல் 2020
யாழ். சரவணை கிழக்கு மயிலப்புலத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பூங்காவனம் கைலாசபிள்ளை அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கைலாசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
லண்டனை வதிவிடமாகக் கொண்ட திருநீலகண்டன்(திரு-Lakshmis Jewelleris-Eastham London), பவானந்தன், கலா, தேஜேஸ்வரி, வசந்தி, பற்பநாதன், ஜெகநாதன்(சுவிஸ்), சிவநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, விசாலாட்சி, தியாகராசா மற்றும் அன்னம்மா(பள்ளம்புலம்- வேலணை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், கனகம்மா மற்றும் இராசையா(கனடா), சிவராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுமதி(லண்டன்), செந்தி(லண்டன்), அருளார் அமுதன்(லண்டன்), பாலகுமார்(லண்டன்), சிவானந்தன்(லண்டன்), சித்திராதேவி(லண்டன்), சிவநேசமலர்(சுவிஸ்), சிலோஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுவிஸை வதிவிடமாகக் கொண்ட கோபிகிருஷ்ணா, சாஸ்கியா(Saskia), லண்டனை வதிவிடமாகக் கொண்ட பிரியங்கா, நிருஜன், பானுஷா, தனுஜா, கரிநாத், சுவானியா(சுவிஸ்), விசிதன்(சுவிஸ்), அபிஷன்(சுவிஸ்), வினேஸ்(லண்டன்), அஸ்விகா(லண்டன்), அயுஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
லண்டனை வதிவிடமாகக் கொண்ட றஜீவ், மாலினி, றமேஸ், றூபேஸ், கஸ்தூரி, கௌதமன், கௌசிகன், திவ்வியன் மற்றும் தீபன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
மியலா(சுவிஸ்- Miya Ella) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2020 வியாழக்கிழமை அன்று காலை நடைபெற்று பின்னர் பி.ப 1:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
லண்டனில் தற்போதுள்ள அசாதாரணநிலை காரணமாகக் குடும்ப உறவுகள் மட்டுமே இறுதிக் கிரியையில் கலந்துகொள்வார்கள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
