திரு. உமாமகேஸ்வரன் பூபாலன்
தோற்றம்: 01 ஜனவரி 1947 - மறைவு: 23 ஆகஸ்ட் 2025
திருகோணமலை - மூதுரைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டி, மன்னார் தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, கனடா - Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. உமாமகேஸ்வரன் பூபாலன் அவர்கள் 23-8-2025 சனிக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலன் - முத்தம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி (குஞ்சு-கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,
மதுரகீதா (மதுரா-கனடா), வேணுகோபன் (வேணன்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உடுப்பிட்டியூர் சிவராசா- ஐயாத்துரை (கனடா), வானதி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அவினாஷ் ராஜேஷ்கண்ணா, அகரன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
அவீனன், அகானா, ஐஷ்னா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
நல்லலிங்கம், பரமேஸ்வரி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தனலட்சுமி, ஜேம்ஸ் அன்ரனி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மராஜா (கனடா), பத்ம ரஞ்சனி (கனடா), பிரபாகரன் (கனடா), பிரதீபன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திரா (இலங்கை), சந்திரா (இலங்கை), வதனா (ஜேர்மனி), கஜன் (ஜேர்மனி), கயூதரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8:00 - 10:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
