திரு. சபா ஆனந்தர் பூபதி பாலவடிவேற்கரன்
(முன்னாள் தலைவர் - பிராங்போர்ட் தமிழ் மன்றம்)
தோற்றம்: 19 மார்ச் 1953 - மறைவு: 22 ஜனவரி 2025
யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கே.கே.எஸ் வீதி இணுவில் மேற்கு, ஜேர்மனி - Wiesbaden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபா ஆனந்தர் பூபதி பால வடிவேற்கரன் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் ஜேர்மனியில் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபா ஆனந்தர் - அன்னம்மா தம்பதியினரின் மூன்றாவது மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் - கமலாதேவி தம்பதியினரின் அன்புக்குரிய மருமகனும்,
சூரியகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காயத்திரியின் பாசமிகு தந்தையும்,
பெனிகென்சி அருள்ஞானத்தின் அன்பு மாமனாரும்,
கேந்திராவின் அண்ணாவும்,
ஏகன் அனேகன், யுவன் விஷ்வா ஆகியோரின் செல்ல அப்புவும்,
சபாபதி பாலகெங்காதரன், இரகுபதி பாலஸ்ரீதரன், அருந்ததி, ஆனந்த கௌரி, காலஞ்சென்ற காயத்திரி ஆனந்தரமணி,
அமரசேனாபதி பாலகார்த்திகைக் குமரன், ஸ்ரீபதி பால முரளிதரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.30 - 7.00 மணி வரையும், 25-01-2025 சனிக்கிழமை முற்பகல் 10.00 - 6.00 மணி வரையும் Niklaus-Burkl Bestattungen GmbH (Mittlerer Sampelweg 21, 55246 Wiesbaden, Germany) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
