Mrs. Poopathy Thiyagarajah
Date of Birth: 22 July 1940 - Deceased: 23 February 2025
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், முல்லைத்தீவு - மல்லாவி, பிரித்தானியா - இங்கிலாந்து, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூபதி தியாகராஜா அவர்கள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - நாகாத்தை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதர் - ஐயாத்தைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தியாகராஜா (மாணிக்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மருதையினார், சுந்தரம், தனிநாயகம், பழனி, கமலம், செல்லையா மற்றும் வன்னியசிங்கம், சரஸ்வதி, சதாசிவம், மனோன்மணி (கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சற்குணராசா, நீதிராசா (கிளி. திருவையாறு ம.வி), அருள்ராசா, சத்தியராசா, ஞானராசா, காலஞ்சென்ற தியாகவதி, ராகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வனஜாதேவி, சுசிலாதேவி, சர்மிளா, வதனி, யோகராணி, தஜந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, பசுபதி, அன்னலட்சுமி, யோகாம்பிகை, வேலுப்பிள்ளை, குணமணி, பேரம்பலம் மற்றும் மோகனவதி, கனகலட்சுமி, தர்மகுலசிங்கம், காலஞ்சென்றவர்களான இரா. பசுபதி, கண்மணி மற்றும் லட்சுமி, தர்மரட்ணம், இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டெய்சி தேவமணி, காலஞ்சென்றவர்களான டானியல், காங்கேசு மற்றும் விஷ்னுகாந்திமதி, இரவீந்திரநாதன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
லதுசன், கரிசன், யதார்த்தன், சுயார்த்தன், சுயார்த்திகா, சாகித்தியன், லிதிசன், அருந்திகா, பவன், சிவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-03-2025 திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
