Mrs. Poornam Enathinathan

(ஓய்வுபெற்ற ஆசிரியை - காரைநகர் இந்துக்கல்லூரி, முன்னாள் உதவி ஆசிரியர் ஈழநாடு பத்திரிகை)

Poornam Enathinathan

Deceased: 05 August 2026

யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பூரணம் ஏனாதிநாதன் அவர்கள் 05-08-2026 புதன்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்ச.

அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு - வள்ளிஅம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காரைநகர் நாவலடிகேணியைச் சேர்ந்த அம்பலவாணர் கந்தையா - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஏனாதிநாதன் (ஓய்வுபெற்ற விசேட ஆணையாளர் உள்ளூராட்சி மன்றம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீதரன், மாலினி, சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுகந்தி, ஞானசம்பந்தன், சிவரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராமி, ஆதவன், மயூரன், மாதங்கி, காயத்ரி, கார்த்திகா ஆகியோரின்  பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான  மீனாட்சி, சிதம்பரப்பிள்ளை, அம்பலவாணர், ராசநாயகம், சரஸ்வதி, செல்லம்மா, யோகம்மா, சுப்பிரமணியம், மாரிமுத்து, மாணிக்கம், பரமேஸ்வரி மற்றும் அம்பலவாணர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு, நடராசா, வள்ளியம்மை, சதாசிவம், கணபதிப்பிள்ளை, வைத்திலிங்கம், சரஸ்வதி, குமாரசாமி, தியாகராஜா, பரமசிவம், பாக்கியம், சுப்பிரமணியம், மனோன்மணி மற்றும் தாட்சாயினி, கனகசபாபதி, சோதியம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2026 00:00)