திருமதி. பூசலிங்கம் மோகனாம்பாள் (லெச்சுமி)

பூசலிங்கம் மோகனாம்பாள் (லெச்சுமி)

தோற்றம்: 10 ஆகஸ்ட் 1952 - மறைவு: 05 ஆகஸ்ட் 2025

கண்டி - தெல்தெனிய கரலியவத்தையைப் பிறப்பிடமாகவும், ஆலம்பவத்தை (இகலவெல), கெங்கல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூசலிங்கம் மோகனாம்பாள் அவர்கள் 05-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்துப்பிள்ளை - மனோன்மணி தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற சீ. சொக்கலிங்கம் - பாக்கியம் தம்பதியினரின் மகளும்,

பூசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

திலீபன், காயத்திரி, மனோஜ் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

சுவீந்திரன், வனிதா, சோஜினி ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலமணி, ராஜலெட்சுமி மற்றும் சாந்தாதேவி, மீனலோசினி, காலஞ்சென்ற விமலாதேவி, புவனேஸ்வரி, கஜேந்திரன், ஜானகி, பத்மாநாதன் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற திருப்பதி - சிந்தாமணி, சந்திரன் - திலகவதி, யோகாம்பரம் - சந்திரா ஆகியோரின் சம்பந்தியும்,

ஆகாஷன், ரித்திக்ஷன், லக்ஷயா, துருவன் ஆகியோரின் அப்பாயியும்,

சுவஸ்திகா, பிரித்விகா ஆகியோரின் அம்மாயியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-08-2025 புதன்கிழமை மதியம் 1:00 மணி முதல் இல-91/6, ஆலம்பவத்தை, கெங்கல்லையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-08-2025 வியாழக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் உடலம் பலகொல பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2025 04:00)