Mr. Poothathamby Velmurugan
Date of Birth: 13 November 1958 - Deceased: 31 March 2026
யாழ். சிறுப்பிட்டி தெற்கு, செல்லப்பிள்ளையார் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், Cazis மற்றும் யாழ். இருபாலை சந்தி,கோண்டாவில் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பூதத்தம்பி வேல்முருகன் அவர்கள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி தவமணி தம்பதிகளின் அருமை மருமகனும்,
ரமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மயில்வாகனம் (முன்னாள் பொ றியியலாளர் சிங்கப்பூர்), விஜயலட்சுமி, கணேசலிங்கம் (சுவிஸ்), காலஞ்சென்ற வேதநாயகி மற்றும் அருணாசலம் (அருண்-பொறியியலாளர் லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05.04.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இருபாலை இல்லத்தில் காலை 07:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10:00 மணிளவில் சிறுப்பிட்டி காலயன் மண்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2026 02:00)
