திருமதி. பிரபாகரன் செல்வமலர்

(கிளிநொச்சி நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக உதவியாளர்)

பிரபாகரன் செல்வமலர்

மறைவு: 16 ஏப்ரல் 2025

கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி. பிரபாகரன் செல்வமலர் அவர்கள் 16-04-2025 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், அம்பாள்குளத்தின் மூத்தகுடி பீட்டர் வில்லியம் தம்பதியினரின் (பீட்டர்) மகளும்,

காத்தமுத்து பிரபாகரன் (பிரபா) அவர்களின் அன்பு மனைவியும், 

புஸ்பமலர் (புஸ்பா -அபிவிருத்தி உத்தியோகத்தர், நீதிமன்றம் கிளிநொச்சி), ஞானசேகரம் (ஞானம் - முன்னாள் Nation Trust Bank உதவி முகாமையாளர், இலண்டன்) ஆகியோரின் சகோதரியும், 

டிவுசிகா (பழைய மாணவி - கிளி/ மத்திய கல்லூரி), ஜனிஸ்ரன், வினிஸ்ரன் (மாணவர்கள் - கிளி/ விவேகானந்தா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 "குஞ்சுகளைத் தவிக்கவிட்டு தாய்பறவை தரணியை விட்டு விண்ணேகி

ஆன்மாவாய்த் தன்னிலும் நிம்மதி பெறுமா? இறைவா! ஏனிந்த சோதனை?

காலனுக்கு கணொணோடு மனதுமில்லை போலும்! யாரழுது இத்துயரம் தீரும்?

அன்னாரின் ஆத்மா இறையடி சேர கனத்த மனதுடன் 

இறைவனை பிராத்திக்கின்றேன்"

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- கோகுலன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2025 06:42)