Prabhaharan Akschai
(2017 A/L - St. John's College, Sir John Kothalawala Defence University - Aircraft Maintenance Engineering - Final Year)
Deceased: 01 June 2025
யாழ். கரவெட்டி, தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் 60 ஆண்டுகள் ஆலய குருக்களாக விளங்கி சிவகதி எய்திய சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள் - பாகீரதி அம்மாள் தம்பதியினரதும், மாவையாதீனம் சு. துரைசாமி குருக்கள், பச்சைநாயகி அம்மாள் தம்பதியினரினதும் பேரனும்,
அண்மையில் சிவபதம் எய்திய ச. பிரபாகரன் (கலாசார சிரேஷ்ட அதிகாரி, இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம்) - கலாநிதி. சீதாலக்ஷ்மி (சேர். பொன். இராமநாதன் காண்பிய மற்றும் கட்புல கலைகள் பீடத்தின் நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்) இன் சீமந்த புத்திரனும்,
அபிஷேக் (IIT,Business Management) இன் பாசமிகு அண்ணனுமான பிரபாகரன் அக்ஷை அவர்கள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முன்னிரவு 7.30 மணியளவில் சிவபதம் எய்தினார்.
அன்னார், சச்சிதானந்தக்குருக்கள் திவாகரன் - கஜலக்ஷ்மி தம்பதியினரும், விநோத்குமார் - இந்துமதி தம்பதியினரும்ம் அருமைப் பெறாமகனும்,
சுவாமிநாத ஐயர், ஜெகதீஷ்வர ஐயர், இரத்தினகைலாசநாத சர்மா, இராதாகிருஷ்ண ஐயர் ஆகியோரின் மருமகனும்,
பரத், ஸ்நேஹா, நிதேஷின் அன்பு சகோதரனும்,
ஸ்ரீவித்தியாவின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 03-06-2025 செவ்வாய்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மதியம் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
முகவரி:-
7/9A, பண்டாரக்குளம் மேற்கு வீதி, நல்லூர்.
www.tamilthakaval.org
