Mr. Premkumar Arunasalampillai

Premkumar Arunasalampillai

Date of Birth: 09 October 1961 - Deceased: 09 November 2025

யாழ். வட்டுக்கோட்டை கிழக்கு தாவளையைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிரேம்குமார் அருணாசலம்பிள்ளை அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் (முன்னாள் பிரதம தபால் அதிபர் - யாழ்ப்பாணம்) - திலகவதி தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான Dr. கந்தையா - வள்ளியம்மா தம்பதியினரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை (முன்னாள் தபால் அதிபர் - கொழும்பு) - சரஸ்வதி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

மகாலிங்கம் - திலகம்மா (வவுனியா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பத்மலோயினி அவர்களின் பாசமிகு கணவரும்,

நயனன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சாந்தகுமார், கீதாஞ்சலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதீஸ்வரி (சுகி-வவுனியா), வசந்தலோயினி (வவுனியா), சந்திரன் (வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருண்குமார், ஆரணி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-11-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 13-11-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2025 00:00)