திருமதி. பிரிம்ரோஸ் ஜெயதேவி குணரட்ணம்
(ஓய்வுபெற்ற துணை அதிபர் - ஏழாலை மகா வித்தியாலயம்)
தோற்றம்: 22 ஜனவரி 1933 - மறைவு: 02 ஜூலை 2026
யாழ். ஏழாலையைச் சேர்ந்த திருமதி. ப்ரிம்ரோஸ் ஜெயதேவி குணரத்தினம் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று சிட்னியில் நித்திய மகிமையை அடைந்தார்.
அன்னார், ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் சாமுவேல் - அல்வையைச் சேர்ந்த எமிலி சாமுவேல் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குணரட்ணம் (யூனியன் கல்லூரி முன்னாள் துணை அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரேம்நாத், பிரேமிகா, நொமிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜோதி குணரத்தினம், பால் தர்மாபாலன், ஜொனாதன் ரகுநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சாம் ஜெயதேவா, ஸ்டீவன் சத்குணதேவா, ஜான் குலதேவா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிக்கோலஸ், பெஞ்சமின், தனுஷா, ஆஸ்வின், ஷரோன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
எமிலி, வாங், மனோர்ஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நடாலி, மீகா, குளோ, லெவி, பிரான்டே, தியோ, சார்லி ஆகியோரின் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-07-2026 திங்கட்கிழமை முற்பகல் 10:30 - 12:15 (சிட்னி நேரம்) மணி வரை Toongabbie Baptist Church (180 Toongabbie Road, Girraween, NSW 2145) இல் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் சரீரம் Pinegrove Memorial Park (Kington Street, Minchinbury, NSW 2770) நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
