திருமதி. புலோமிசை அருளம்பலம் (தயாம்மா)
தோற்றம்: 04 ஜூன் 1939 - மறைவு: 18 அக்டோபர் 2025
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புலோமிசை அருளம்பலம் அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் பாசமிகு துணைவியாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, பரஞ்சோதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ரோகிணியம்மா, தனபாலரட்ணம் (அன்பு வைத்தியர்), இராஜசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தணிக்கை (பிரித்தானியா), அம்பிகை (கனடா), காலஞ்சென்ற சபேசன், வனிதை (பிரித்தானியா), இராதை (உடற்கல்வி அலகு, யாழ் பல்கலைக்கழகம்), விக்னேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
போதரட்ணம் (பிரித்தானியா), கருணாகரன் (பிரித்தானியா), அபிராமி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அரூபன், பாரீசன், பிறையவன், தர்சன், கீர்த்தனா, கனிக்கா, ஹாசினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-10-2025 செவ்வாய்கிழமை இல- 458, கண்டி வீதி, அரியாலையில் உள்ள அன்னாரினது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- இராதை அருளம்பலம்(மகள்)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
