திருமதி. புனிதவதி ஆறுமுகம் (ராசாத்தி)
(ஓய்வுபெற்ற ஆசிரியை, யாழ்.இந்து மகளிர் கல்லூரி)
தோற்றம்: 02 ஏப்ரல் 1931 - மறைவு: 07 ஜனவரி 2023
யாழ். வேலணை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி ஆறுமுகம் அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. யசோதரா (கனடா), Dr. சசிதரா (லண்டன்), Dr. சபேஷன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மரத்தினம், சண்முகரத்தினம், திலாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திலகவதி, சண்முகநாதன், பத்மாவதி, கமலாதேவி மற்றும் இலட்சுமிதேவி (இந்திரா), தயாநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கணேசலிங்கம், மகேந்திரநாதன் மற்றும் அகிலத்திருநாயகி, குணரத்தினம், காலஞ்சென்ற ஏகாம்பிகை மற்றும் பூமணி ஆகியோரின் மைத்துனியும்,
முரளிதரன், கிரிதரன், ஸ்ரீதரன், கலாதரா, வசுந்தரா, சுமித்ரா, Dr. சிவானுஜா, சேயோன், Dr. சிவப்பிரியா, Dr. சுபேந்திரன் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,
குமரன், காந்தன், சயந்தன், Dr. வரதன் ஆகியோரின் அன்பு மாமியும்,
Dr. கிருஷ்ணி, Dr. திவ்வியா, சேயோன், விக்னேஷ், குமார், திஷான், பிரம்மன், நீரஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கிருஷ்ணா, அனவி ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.முகவரி:
www.tamilthakaval.org
