Mrs Punithavathy Sithambaranathan(Punithamakka)
Deceased: 01 January 2020
கரவெட்டி கிழக்கு, தல்லையப்புலத்தைப் பிறப்பிடமாகவும் வீரபத்திரர் கோயில் கரவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புனிதவதி சிதம்பரநாதன் (01.01.2020) புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் அமரர்களான சிற்றம்பலம் - தெய்வானை தம்பதிகளின் ஏக புதல்வியும்,
அமரர்களான சின்னத்தம்பி -சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அமரரான சின்னத்தம்பி சிதம்பரநாதனின் (நிலஅளவையாளர்) அன்பு மனைவியும்,
சொர்ணா (ஆசிரியர்- சல்லியாம்பாள் மகாவித்தியாலயம், திருகோணமலை), இந்துமதி (லண்டன்), யோகராஜ் (லண்டன்), ஜெயநாதன் (கண்ணன்), ஜெயாநந்தன் (முருகன், விரிவுரையாளர், இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரி) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
மோகன் (பொறியியலாளர், புகையிரத திணைக்களம், திருகோணமலை), நம்பி (பொறியியலாளர், லண்டன்), தபோதினி (லண்டன்), பிரதீபா (விரிவுரையாளர், பொறியியற்பீடம், யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திவ்வியா, பிரியங்கா, லக்சனா, லாவண்யா, அபித்தா, அபிராமி, ஆதர்ஷா ஆகி யோரின் அன்புப் பேர்த்தியும்,
சிவபாக்கியம், பரமேஸ்வரி, அமரர் பார்பதி தேவி, இராசம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.01.2020) வெள்ளிக்கிழமை மு.ப 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சோனப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
வீரபத்திரர் கோவிலடி, கரவெட்டி மத்தி,
தகவல்:- குடும்பத்தினர்
+94 77 156 8844
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2020 03:19)
