திருமதி புனிதவதி திருஅருள்
தோற்றம்: 27 ஏப்ரல் 1946 - மறைவு: 21 மார்ச் 2022
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மானிப்பாய் மூனாமலை, பிரித்தானியா Haverfordwest Wales ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி திருஅருள் அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம்(இலங்கை புகையிரத பொறியியலாளர்) சரஸ்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(வட்டுக்கோட்டை தபால்சேவை அத்தியட்சகர்) இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருஅருள்(பல் வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியேந்திரன்(England), பவானி(Wales) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆதித்தன்(Wales) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான டாக்டர் ஜெகநாதன், கைலைநாதன்(கணக்காளர்) மற்றும் விஸ்வநாதன்(ஓய்வுபெற்ற டாக்டர்- லண்டன்), செளபாக்கியலஷ்மி சிவஞானம்(ஓய்வுபெற்ற சங்கீத வித்துவான்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிகேதன், நிவேதா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
