Mrs. Punithawathy Kumaragurunathan
Date of Birth: 06 August 1946 - Deceased: 31 August 2024
யாழ். இணுவில் மேற்கு, "பழமுதிர்ச்சோலை", பரமானந்தவல்லி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புனிதவதி குமரகுருநாதன் அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா-பாக்கியம் தம்பதியினரின் ஏக புதல்வியும்,
காலஞ்சென்ற சிவஞானம்-கனகம்மா தம்பதியினரின் (நாயன்மார்கட்டு) அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. S. K. நாதன் (மஸ்கெலியா-சரஸ்வதி கலா மன்றம்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. சந்திரகுமார் (D.T.C.O Chest Clinic-பொது வைத்தியசாலை-வவுனியா), Dr. செ. தனவந்தி (தேசிய வைத்தியசாலை-கொழும்பு), த. செல்வந்தி (C.P.L-கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விவேகானந்தன் (ஈழபதீஸ்வரா் - வெம்பிலி இலண்டன்) அவர்களின் அன்பச் சகோதரியும்,
Prof. இ. செந்தில்நிதி (இலங்கை திறந்த பல்கலைக்கழகம்-கொழும்பு), ச. சர்வலோஜினி (சமுர்த்தி முகாமையாளர் மாவட்ட செயலகம் -வவுனியா), சி. தயாளன் ("Bell"-கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ச.லோஜிகன் (மருத்துவபீடம்-B.S.M Belarus), செ.அஞ்சனன் (கொ/றோயல் கல்லூரி), த.லக்ஷிகன் (பொறியயல் பீடம்-குயின்ஸ் பல்கலைக்கழகம்-கனடா), த.ஜனுஷிகன் (பொறியியல் பீடம்-குயின்ஸ் பல்கலைக்கழகம்-கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரேணுகா (இலண்டன்), காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் (ஆயுர்வேத வைத்தியர்-உரும்பிராய்), சுப்பிரமணியம் (சிறைச்சாலை அதிகாரி-நுணாவில்), மயில்வாகனம் (வங்கி முகாமையாளர்-நாயன்மார்கட்டு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கௌசிகா (இலண்டன்), நிஷாகரன் (இலண்டன்), ஹரிஹரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 05-09-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அன்னாரின் இல்லமான "பழமுதிர்ச்சோலை" இணுவில் மேற்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
