Miss. Pushpakaran Seethusa

(Univerity of Torino, Italy - University Student)

Pushpakaran Seethusa

Date of Birth: 12 April 2006 - Deceased: 10 November 2026

“உனது புன்னகையும் ஒளியும் என்றும் எங்கள் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும்.”

இத்தாலி - Novara வை வசிப்பிடமாகக் கொண்டிருந்த செல்வி. புஸ்பகரன் சீதுசா அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இவ்வுலகைவிட்டு  பிரிந்து சென்ற துயரச் செய்தியை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரை நேசித்த அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற புஸ்பகரன் (ஜெயா) - பொன்மலர் (கிளி/பரந்தன் இ.ம.வி முன்னால் ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மகளும்,

மிதுசா அவர்களின் பாசமிகு தங்கையும்,

வட்டக்கச்சியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் - தங்கம்மா (ஓய்வு பெற்ற அதிபர்) மற்றும் உடையார்கட்டை சேர்ந்த பொன்னம்பலம் - காலம்சென்ற விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு  பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலி மற்றும் இறுதிக்கிரியைகள் 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் (இத்தாலிய நேரம்) இத்தாலியின் நோவாரா (Novara) நகரிலுள்ள Ospedale Maggiore வைத்தியசாலையின் பிரேத அறையில் இறுதி அஞ்சலியும்,  இறுதிக்கிரியைகளும் நடைபெற்று, அன்னாரின் திருவுடல் Ponzone (BI) தேவாலயத்தின் பங்குத் திருச்சபை மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மதியம் 1.00 மணி முதல் 3.00 மணி வரை பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“என்றென்றும் நேசிக்கப்படுபவள்; என்றும் எங்கள் இதயங்களில் வாழ்பவள்.”

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  ஸ்ரீரூபன் - சர்மிளா (சித்தப்பா - சித்தி)

குமரபுரம், பரந்தன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2026 00:00)