Mrs. Pushpalatha Jeyasingham
(ஓய்வுநிலை ஆசிரியை)
Date of Birth: 02 January 1965 - Deceased: 21 April 2026
மட்டக்களப்பு - பெரியபுல்லுமலையைப் பிறப்பிடமாகவும், செங்கலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புஷ்பலதா ஜெயசிங்கம் அவர்கள் 21-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வாழ்நாள் பேராசிரியர் ஜெயசிங்கம் (முன்னாள் உபவேந்தர், கிழக்கு பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு துணைவியாரும்,
காலஞ்சென்ற தம்பிராஜா - பவளசுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தங்கமுத்து - மரகதம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
வைத்திய கலாநிதி மதுரா (அவுஸ்திரேலியா), கலாநிதி ஆதுரன் (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசந்தகுமார் (பாபு - கனடா), Dr. பகீரதி (நியூஸர்லாந்து), கேசவன் (இலண்டன்), Dr. நந்தகுமார் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
கலாநிதி காவ்யா (அமெரிக்கா) வின் பாசமிகு மாமியாரும்,
ஆத்யா சாய்கந்திகாவின் பாசமிகு அப்பம்மாவும்,
உதயகுமாரி (இந்தியா), குணசேகரன் (இலண்டன்), அமிர்தலிங்கம் (இந்தியா), தமிழ்செல்வி (இந்தியா), ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
சிவனேஸ்வரி (கனடா), லோகநாதன் (நியூஸர்லாந்து), அன்னா (இலண்டன்), Dr.நந்தினி (அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனியும்,
அழகப்பன் (இந்தியா), Dr. அழகுலதா நாச்சியார் (இந்தியா), சு.ப. குணசேகரன் (இந்தியா), ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-06-2026 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணியளவில் இல- 321, பிரதான வீதி, செங்கலடியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருடல் கள்ளியங்காடு, மட்டக்களப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
