திருமதி. புஸ்பலீலாவதி கந்தசாமி (ராசாத்தி)

புஸ்பலீலாவதி கந்தசாமி (ராசாத்தி)

தோற்றம்: 25 செப்டம்பர் 1948 - மறைவு: 15 ஏப்ரல் 2025

யாழ். கைதடி கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பலீலாவதி கந்தசாமி அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை JP (முன்னாள் உரிமையாளர் - லீலாவதி ஸ்ரோர்ஸ் கைதடிச்சந்தி) - மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான மீசாலையைச் சேர்ந்த பொன்னையா - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா கந்தசாமி (ஓய்வு நிலை பதிவாளர் - யாழ் பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

உஷாமினி (கனடா), மயூரன் (பிரித்தானியா), சசிகலா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருவாரூரன் (கனடா), கிருசாந்தினி (பிரித்தானியா), ரமேஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புஸ்பராசா, காலஞ்சென்ற புஸ்பராணி, புஸ்பராஜேஸ்வரி, காலஞ்சென்ற புஸ்பவதி, புஸ்பரதி, புஸ்பமலர், ஆகியோரின் அன்பு சகோதரியும்,

சுரேக்கா, கனிஸ்கா, அக்சரி, ஷஸ்வின், விதுசன், பவிதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது கைதடி இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கைதடி ஊற்றல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/04/2025 04:00)