திருமதி. புஷ்பலோஷனி செல்வராஜா
தோற்றம்: 01 செப்டம்பர் 1947 - மறைவு: 12 ஜனவரி 2026
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஷ்பலோஷனி செல்வராஜா அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் - தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான A.S. சங்கரப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற A.S.S செல்வராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பிரவீன்சங்கரின் அன்புத் தாயாரும்,
தக்ஷந்தியின் அன்பு மாமியாரும்
டவிரா வர்ஷனா, செல்வின் சங்கரின் ஆகியோரின் பாசமிக்க பேத்தியும்,
மீனலோஷனி, ஜெயரட்ணம், விஜயரெட்ணம், சந்திரலோஷனி, குணரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, இராசரத்தினம், ஞானப்பிரகாசம் மற்றும் பத்மாவதி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, பாலச்சந்திரன், சுப்பிரமணியம், பாலராணி, லூட்ஸ்மேரி, காலஞ்சென்ற மகேந்திரன், நளாயினி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற Dr. வைத்தியலிங்கம், மனோன்மணி, வசந்தாதேவி, காலஞ்சென்ற பாலசண்முகம், தனபாலசிங்கம், காலஞ்சென்ற சுகந்தமலர் ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-01-2026 புதன்கிழமை அன்று மாலை 7:00 மணி முதல் இல-98, விவேகானந்தா மேடு, கொழும்பு-13 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-01-2026 வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
