திருமதி. புஷ்பம் மஹேஸ்வரி
(செயலாளர் வெள்ளவத்தை நாகபூசணி அம்பாள்)
தோற்றம்: 11 பெப்ரவரி 1952 - மறைவு: 31 மே 2024
திருமதி. புஷ்பம் மஹேஸ்வரி செயலாளர் வெள்ளவத்தை நாகபூசணி அம்பாள் அவர்கள் 31-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா ராமசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
அனுஷா மற்றும் வினோ பிரதீப்பன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சந்திரசேகர் மற்றும் ஷாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாய்வியின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பொரளை ஜெரட்ண மலர்ச்சாலையில் (Jeyaratna Parlor, Borella, Colombo 08) இறுதி அஞ்சலிக்காக 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பொரளை பொது மயானத்தில் இடம் பெறும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவிக்கின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2024 06:18)
