திருமதி. புஷ்பாஞ்சலிதேவி கருணானந்தசாமி

புஷ்பாஞ்சலிதேவி கருணானந்தசாமி

தோற்றம்: 30 நவம்பர் 1940 - மறைவு: 20 அக்டோபர் 2021

திருகோணமலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி அவர்கள் 20.10.2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் அமரர் கருணானந்தசாமியின் அன்பு மனைவியும்,
 
அமரர்கள் சுப்ரமணியம் நவமணி தம்பதியினரின் அன்பு மகளும்,
 
அமரர்கள் செல்லத்துரை அம்மணிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
 
ஜெயந்தி, மகேஸ்வரன் (Canada), சத்யா (ஓய்வுநிலை ஆசிரியர்), தேன்மதி (Germany), தனலட்சுமி (UK), மணிவண்ணன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
சுரேந்திரன் அமரர் ஜெயந்தி, அமரர் தேவதாஸ், விஜயசுந்தரம் (Germany), வரதராசன்(UK), அருணா(Canada) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சபேசன்-பார்கவி மிரேஸ், அம்பிகைராஜ் – வைசாலி, ஹாசினி, எனோத், சங்கவி, சஜித், நிரஞ்சன், அன்பகன், திலீபன், பகலவன், சுடர வன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
சோபிகா, ஜாதவ்,அக்க்ஷரா, விராஜ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
 
புவிராஜசிங்கம், வசந்தாதேவி, ரமணஹரி, திருமலைதேவி, குமுதினி, சுரேஷ் அமரர் உஷாராணி ஆகியோரின் அன்பு அக்காவும் ஆவார்.
 
அன்னாரின் ஈமக்கிரியைகள் வியாழக்கிழமை 21.10.2021 அன்று 38 வன்னியார் வீதி இல்லத்தில் நடைபெற்று மாலை 4.00மணி அளவில் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

                   +1.514.297.2121

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/10/2021 07:06)