திருமதி. புஷ்பராணி கையிலாயநாதன்
தோற்றம்: 26 நவம்பர் 1940 - மறைவு: 16 ஆகஸ்ட் 2025
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி புஷ்பராணி கையிலாயநாதன் அவர்கள் 16-08-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஏகாம்பரநாதன் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு.திருமதி இளையதம்பி தம்பதியினரின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற கையிலாயநாதன் (MLT இளைப்பாறிய - யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற விவேகவதி, இராஜநாதன், காலஞ்சென்ற யோகராணி, பாஸ்கரதேவி, கனகசபாநாதன், ருக்குமணிதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற யோகரட்ணம், சரஸ்வதிதேவி (ராதா), காலஞ்சென்றவர்களான நடராஜா, நரேந்திரன் மற்றும் வரலக்ஷ்மி, ஆறுமுகம், கணபதிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான கிருஷ்ணராஜா, சோமஸ்கந்தா மற்றும் தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்
ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தெஹிவளை களுபோவிலை ஜெயரட்ண மலர்ச்சாலை எனும் முகவரியில் நடை பெற்று பின்னர் கொஹீவளை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
