திருமதி. புஸ்பராணி இராசரத்தினம்
மறைவு: 05 மே 2026
யாழ். காரைநகர் கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 5ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புஸ்பராணி இராசரத்தினம் அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - நாகமுத்து தம்பதியினரின் அன்புப் புத்திரியும்,
சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் (ஓய்வுபெற்ற கணக்காய்வு அத்தியட்சகர்) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
இராஜமுரளி, ரோகினி, மோகன்ராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குகபாலசிங்கம், புஸ்பலிங்கம், புஸ்பராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
சற்குணதேவி, விமலலோஜினி, பொன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துசித்தா, முரளீகரன், வசந்தராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அர்ச்சயா, அச்சினி, ஆருஸன், ஜெய்சோன், தனிக்கா, ஜாஸ்வின், அஷிக்கா ஆகியோரின் அன்புப்பேத்தியும்,
கேதீஸ்வரன், குகதர்சினி, ஸ்ரீசோபன், ருனித்தா, ஸ்ரீ வேலவன், கோகுலறமணன், கோகுலஜித், கோகுலநிமலன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-05-2026 சனிக்கிழமை மாலை 4.00 - 8.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
