Mrs. Pushparani Thiyagarajah

Pushparani Thiyagarajah

Date of Birth: 27 December 1936 - Deceased: 11 December 2024

யாழ். சங்குவேலி கற்பக்கணையை பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி தியாகராஜா அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காராளசிங்கம்-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கோணையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஜெயசேகரன், ஜெயகுமார் மற்றும் ஜெயேந்திரன், ஜெயேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்தி, பவானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிலோசனதேவி, ரவீந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, பாலசிங்கம் மற்றும் பவளராணி, சுந்தரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவீந்த், பிரகாந்த், பிரலஷ்சிகா, பிந்துஜா, ஹரீஸ், ஹரிணி, மதுரா, சுஜீபன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

மித்திரன், மகிழன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவர்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-12-2024 சனிக்கிழமை மாலை 4:00 - 9:00 மணி வரை Complexe Funèraire Aeterna et Crematorium இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-12-2014 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2024 05:00)