திருமதி. புஸ்பவல்லி இராசலிங்கம் (கிளி)

புஸ்பவல்லி இராசலிங்கம் (கிளி)

தோற்றம்: 28 ஏப்ரல் 1961 - மறைவு: 14 ஜூலை 2025

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பவல்லி இராசலிங்கம் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லையா சின்னையா - அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா கணபதிப்பிள்ளை ஆறுமுகம் - தங்கம்மா (நல்லம்மா) தம்பதியினரின் அருமை மருமகளும்,

இராசலிங்கம் (லிங்கம்) கணபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு துணைவியும்,

செளமியா, கஜானி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

நிறோசன் கமலநாதன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

நாகராஜேஸ்வரி (இராசாத்தி), காலஞ்சென்ற நகுலேஸ்வரி (குஞ்சு), சேதுராசா (பெரியாம்பி), சிவராசா (சின்னத்தம்பி), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் (ஈசன்/ ரஞ்சன்) ஆகியோரின் சகோதரியும்,

மயில்வாகனம் (சிவம்), கதிரவேலு (கதிர்), நடேசலிங்கம் (சிங்கன்), காலஞ்சென்ற பஞ்சலிங்கம், சுபத்திராதேவி (சுகந்தி), விரூபி (பிரதேச செயலகம்- நெல்லியடி), மகாதேவன், காலஞ்சென்ற சசிலேகா, லோகன், காலஞ்சென்ற குமார், ராணி, சிவா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிளி, காந்தன், காலஞ்சென்ற கண்ணன், விஜி, சீலன், மனோ, ஈசன், இரவி, செல்வன், ஞானம், யோகா, விமலா, கிரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-07-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 17-07-2025 வியாழக்கிழமை காலை 7:00 - 8:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2025 04:00)