Mrs. Pushpawathy Thuraisamy
Date of Birth: 30 June 1945 - Deceased: 04 June 2026
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளம், முகத்தான்குளம், ஜேர்மனியின் தலைநகர் பேர்லின் ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. புஸ்பவதி துரைச்சாமி செல்வரட்ணம் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா - நாகம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்புமருமகளும்,
துரைச்சாமி செல்வரெட்ணம் (முன்னாள் போசகர் குழுச் செயலாளர், பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தவரஞ்சனியின் (செல்வி) பாசமிகு தாயாரும்,
நந்தகோபாலின் (கண்ணன்) ஆசை மாமியாரும்,
நசபரீசன், ஆரூரன், அஷாரன் ஆகியோரின் ஆசைப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 - 14.00 மணி வரை Feierhallen Krematorium (Ruhleben), Am Hain 1 .13597 Berlin எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
