Mr. Puthirasigamsni Pulenthiran
Date of Birth: 04 January 1954 - Deceased: 15 November 2026
யாழ். வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. புத்திரசிகாமணி புலேந்திரன் அவர்கள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புத்திரசிகாமணி - தங்கரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூரியமூர்த்தி - தங்கரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செல்வராணி (குட்டிச்செல்வம்) அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி, பிரசன்னகுமார் (பிறேம்), அன்புச்செல்வி, பாமினி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தகப்பனும்,
சிவனேசன், சனோமியா, சோதீஸ்வரன், சத்தியசதீஸ், கமல்ராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தெய்வேந்திரராணி, தேவசிகாமணி (B.T. மணி), மதுபாலா, குபேரகுமாரி, சர்வதமன்னன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திருச்சிற்றம்பலம் (A.T. மணி), வடிவேல் மற்றும் கௌரி, செல்வஜோதி, பாலசுப்பிரமணியம் (பப்பாளி), கலாமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
யோகசிகாமணியின் பாசமிகு சகலையும்,
காலஞ்சென்ற அனந்தராசாவின் பாசமிகு அத்தானும்,
தனுஷ் அன்ரியன், சந்தோஷ், சப்தமி, சப்தனன், சாட்சி, துகிலன், சாட்சவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஜேடனின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-11-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 - 1:00 மணி வரை ÆTERNA - Complexe funéraire & Crématorium (55, rue Gince, Montreal, Québec H4N 1J7, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து ஈமக் கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பவானி (மகள்):- +1 514 715 6695
பிரேம் (மகன்):- +94 76 896 8307
செல்வி (மகள்):- +1 647 893 9409
பாமினி (மகள்):- +1 438 880 2094
சர்மிளா (மகள்):- +91 989 481 2678
www.tamilthakaval.org
