Mrs Puvaneshwary Alosiyas
Date of Birth: 29 November 1933 - Deceased: 14 May 2024
யாழ். மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-05 அன்டர்சன் தொடர்மாடி "C"2/1 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி அலோசியஸ் அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அலோசியஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இரவீந்திரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
தமயந்தி அவர்களின் அன்பு மாமியாரும்,
தனுஷன், வைசாலி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இராமநாதன் மற்றும் தாமோதரம்பிள்ளை, காலஞ்சென்றவர்களான அகிலேஸ்வரி, ஜெயநாதன், பத்மநாதன் மற்றும் புஸ்பநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வன்னியசிங்கம், சற்குணேஸ்வரி, சாரதாதேவி, சிவானந்தம், லோகேஸ்வரி, சத்தியமேகனா, இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான மகாராஜா, ரிச்சாட், லில்லி ஐசாக் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 16-05-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
