திருமதி. புவனேஸ்வரி இராசரத்தினம் (கிச்சி)

(இளைப்பாறிய ஆசிரியை- வேலணை மத்திய மகாவித்தியாலயம், கரம்பன் St. Mary's Convent கல்லூரி)

புவனேஸ்வரி இராசரத்தினம் (கிச்சி)

தோற்றம்: 29 ஜனவரி 1931 - மறைவு: 01 ஜூலை 2021

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கரம்பன் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இராசரத்தினம் அவர்கள் 01-07-2021 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியா Melbourne இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசமணி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான முருகர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகர் இராசரத்தினம் (M.R) அவர்களின் அன்பு மனைவியும்,

தபோநிதி (அவுஸ்திரேலியா), கஜானனன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாளகுமாரன், விஜித்திரா ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி சுப்பையா, யோகம்மா குமாரசிங்கம், பரமேஸ்வரி செல்லையா, செல்லம்மா தர்மலிங்கம் ஆகியோரின் இளைய சகோதரியும்,

பொன்னம்மா, காலஞ்சென்றவர்களான துரைராஜா, கனகம்மா, இராஜேஸ்வாி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவகாமசுந்தரி, செல்வராஜேஸ்வரி, விமலசுந்தரி, யோகேஸ்வரி, இராஜ்குமார், நந்தகுமார், நம்பிரான், யசோதா ஆகியோரின் ஆசைச் சின்னம்மாவும்,

காலஞ்சென்ற தயாளன் மற்றும் திலகவதி, சபேசன், சிவம் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

காலஞ்சென்ற உதயசந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன், இரவிச்சந்திரன், கிருபாகரன், சுபோதினி, மஞ்சுளா, யசோமதி, லம்போதரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

வர்ஷினி, ஓவியா, பவ்வியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Springvale Boyd Chapel யில் பார்வை, கிரியை நடைபெற்று பின்னர் Springvale Botanical Cemetery யில் தகனம் செய்யப்படும். 

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-   குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
தபோ தயாளகுமாரன் - மகள் Mobile : +61 46 896 2876
கஜானனன் இராசரத்தினம் - மகன் Mobile : +1 416 880 6243

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2021 01:28)