திருமதி. புவனேஸ்வரி கணபதிப்பிள்ளை
மறைவு: 22 அக்டோபர் 2026
யாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், குமிழங்குளி சக்கலாவோடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இரவு 10.00 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற காசிநாதர் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சுபேதினி, பிரதீபன், தயாளினி, அனுஷா ஆகியோரின் அன்புத் தாயரும்,
நகுலேஸ்வரன், சசிகலா, மோகனேந்திரன், சிவதர்ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுஷன், சாளினி, லக்சன், பவிஷ், கவிஷன், லக்ஷிகா, பவிஷா, நிந்துஜா, ஹரணி, சிவனயா ஆகியோரின் பேத்தியாரும்,
காலஞ்சென்ற பத்மநாதன், சபாநாதன், செந்தில்நாதன், ஜெகநாதன், ஸ்ரீரங்கநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம், நேசரத்தினம், கனகமலர், கமலாம்பிகை, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-10-2206 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
